’நாசா’ ட்விட்டரில் ஆபாச படம் - ஹேக்கர்கள் அட்டூழியம்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (17:56 IST)
சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஹேக்கர்கள் ஆபாசப் படங்கள் பதிவேற்றியதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர்.
 

 
சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசா, ’கெப்ளர் அண்ட் கே-2’ [NASA Kepler and K2] என்ற ட்விட்டர் சமூக வளைதளங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி இந்த ட்விட்டர் தளத்திற்கு 'r4die2oz' என்று பெயர் சூட்டப்பட்டு அதில், புரோஃபைல் படத்தையும் ஒரு பெண் புகைப் படத்திற்கு மாற்றியுள்ளனர்.
 

 
மேலும், ட்விட்டர் கணக்கை வேறு ஒரு ஆபாச இணையதளத்துடன் இணைத்து லிங்க் கொடுத்துள்ளனர். நாசா டுவிட்டர் பக்கத்தை பின்பற்றுவர்களுக்கு திடீரென வேறொரு புகைப்படம் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த பக்கத்தை முடக்கிய நாசா, ஆபாச படத்தை நீக்கிவிட்டு பின்னர் வழக்கம் போல் செய்திகளை பதிவேற்றியது.
 
இதையடுத்து யாரோ ஹேக் செய்தது தெரியவந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்துக் குள்ளேயே ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளது நாசா அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்