வேற்று கிரகங்களில் வாழ்வாதாரம்: நாசா ஆய்வு!!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2017 (14:25 IST)
வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ சாத்தியமா என்று நாசா புதிய முறையில் ஆய்வு செய்து வருகிறது.


 
 
வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று அறிவியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதற்காக ஏராளமான விண்கலங்களை அனுப்பி, கிரகங்களின் வானிலை, நிலம், வாயுக்கள் குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. 
 
இந்த ஆய்வில், மற்ற கிரகங்களை ஒப்பிடும் போது நிலவில் வாழ சாத்தியம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் நாசாவின் புதிய முறையில் ஆய்வு ஒன்றை தொடங்கியுள்ளது. அதன்படி தற்போதைய முறையை விட 10,000 மடங்கு அதிக துல்லியமாக புதிய முறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆய்வு அமினோ அமிலங்கள் தொடர்பானது. மேலும் அனைத்து உயிரினங்களின் உள்கட்டமைப்புகளையும் தீவிர சோதனை செய்கின்றனர்.
அடுத்த கட்டுரையில்