ஜூப்பிட்டரை விட 13 மடங்கு பெரிய கோள்: நாசா கண்டுபிடிப்பு!!

ஞாயிறு, 12 நவம்பர் 2017 (15:38 IST)
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்  வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரிய அளவில் உள்ள கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 


 
 
நாசா விண் வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளது.
 
இந்நிலையில் தற்போது மிகப்பெரிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது வியாழனை விட 13 மடங்கு பெரியது என கூறப்பட்டுள்ளது. 
 
இந்த கிரகத்திற்கு ஒ.ஜி.எல்.இ- 2016-பி.எல்.ஜி-1190 எல்.பி.’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 22 ஆயிரம் ஒளி தூரத்தில் உள்ளதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்