செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ஒரு லட்ச இந்திய பிரஜைகள்!!

வியாழன், 9 நவம்பர் 2017 (16:01 IST)
செவ்வாய் கிரகத்தை குறித்து ஆய்வு நடத்த இந்தியா மங்கல்யான் செயற்கைகோளை அனுப்பியுள்ளது. இதே போல் பல நாடுகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


 

 
செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, காலநிலை மாற்றம், தண்ணீர் போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனர். 
 
நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்தில் உள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய மேலும் விண்கலம் அடுத்த ஆண்டு அனுப்பப்பட உள்ளது. 
 
அந்த விண்கலத்தில் மனிதர்களின் பெயர்களை சிலிகான் சிப்பில் தலைமுடியை விட சிறிய அளவில் எழுதி அனுப்ப உள்ளனர். இதற்காக பல நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களது பெயரை பதிவு செய்து வருகின்றனர். 
 
உலகம் முழுவதுமிலிருந்து 24 லட்சம் மக்கள் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து 1 லட்சம் மக்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். 
 
செவ்வாய் கிரகத்தில் நாசா ஆய்வு செய்து வரும் நிலையில், மனிதர்களை அங்கு குடியேற செய்யும் திட்டம் நாசாவின் முக்கிய கனவுகளில் ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்