விண்கல்லில் மோதிய விண்கலம்; திசை திரும்பியது விண்கல்! – நாசா புதிய சாதனை!

புதன், 12 அக்டோபர் 2022 (12:10 IST)
விண்கற்களின் பயண பாதையை விண்கலங்களை மோதி திசை திருப்பும் முயற்சி வெற்றிப்பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

விண்வெளி ஆய்வில் உலகின் பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் அவற்றில் முன்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இருந்து வருகிறது. 

சமீபத்தில் விண்வெளியிலேயே விண்கற்களை மோதி அதன் பாதையை மாற்றும் முயற்சியில் நாசா இறங்கியது. DART Mission (Double Asteroid Redirection Test) டார்ட் விண்கலம் ‘Dimorphos’ என்னும் விண்கல் ஒன்றின் மீது மோதி தாக்க திட்டமிடப்பட்டது.

ALSO READ: தாய்பாலிலும் கலந்துவிட்ட ப்ளாஸ்டிக் துகள்கள்! – அதிர்ச்சியில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்!

கடந்த செப்டம்பர் 27ம் தேதி பூமியிலிருந்து 11 மில்லியன் தொலைவில் உள்ள டிமார்பஸ் விண்கல்லை நாசாவின் டார்ட் விண்கலம் தாக்கியது. இது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. விண்கலம் தாக்கிய பின் விண்கல்லின் பயண பாதையை ஆய்வு செய்ததில் விண்கல்லின் சுற்றுப்பாதை 32 நிமிடங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதால் எதிர்காலத்தில் பூமியை நோக்கி விண்கற்கள் வந்தால் அவற்றை விண்கலத்தால் தாக்கி பாதையை மாற்ற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Edited By: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்