பள்ளி மாணவிக்கு தாலி, 4 மாதத்தில் குழந்தை, சமுதாயத்தை சீரழிக்கும் சினிமா: கிருஷ்ணசாமி

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:56 IST)
பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் மாணவனின் ஹீரோயிசம், 4 மாதத்தில் குழந்தை பெறும் நடிகை போன்றவைகளால் சமுதாயம் சீரழிகிறது என்றும் சினிமாதான் சமுதாயத்தைச் சீரழிக்கிறது என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலிகட்டிய சம்பவம் குறித்து கூறிய புதிய தலைமுறை தலைவர் கிருஷ்ணசாமி கூறியபோது, பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலிகட்டும் ஹீரோயிசம் சினிமாவில் இருந்து வந்ததுதான் என்றும் திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின் சமுதாயத்தை சீரழிகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் மதங்கள் குறித்து அடிப்படையை தெரியாதவர்கள் எல்லாம் எப்படி இயக்குனர் ஆனார்கள் என்று கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி, கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மதத்தில் பல்வேறு பிரிவுகள் இருப்பது போலவே இந்து மதத்தின் பிரிவுகள் தான் சைவம் மற்றும் வைணவம் என்று அவர் தெரிவித்தார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்