செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (09:06 IST)
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பபோவதாக செய்தி வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ முடியுமா? என்று பல விண்கலன்களை அனுப்பி, பல ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது நாசா செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இத்திட்டத்தின் மேலாளர் மிமி ஆங், இதுவரை யாருமே மார்ஸ் ஹெலிகாப்டரை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடவே இல்லை என்றும், ஆகையால் தொடர்ச்சியாக புதுமையான விடயங்களை சந்தித்து வருகிறாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் மிமி ஆங் “இந்த ஹெலிகாப்டர் விலை உயர்ந்த சாதனங்களை கொண்டு செல்லாவிட்டாலும், உயர் வண்ணப் படங்களை எடுக்ககூடிய ஒரு கேமராவை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்