நாசா மற்றும் உபேர் கால் டாக்ஸி இணைந்து பறக்கும் டாக்ஸி சேவையை துவங்க உள்ளது.
ஆளில்லா போக்குவரத்து மேலாண்மை என்ற திட்டத்தின் கீழ் பறக்கும் டாக்ஸி சேவையை நாச மற்றும் உபேர் கொண்டுவரவுள்ளது.
இந்த சேவையை 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதற்கான முதல் சோதனை ஓட்டம் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், வணிக சேவைக்காக 2023 ஆம் ஆண்டு முதல் இச்சேவை நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் விமானிகளுடனும் பின்னர் தானியங்கி சேவையாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.