1300 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் விண்கலம்

புதன், 11 அக்டோபர் 2017 (12:02 IST)
பிளாக் நைட் என்ற விண்கலம் நம் பூமியை 1300 ஆண்டுகளாக கண்காணித்து வருவதாக சில அறிவியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.


 

 
பல ஆண்டுகளாக மனிதனுக்கு இருக்கக் கூடிய ஒரே கேள்வி, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிரினம் உள்ளாதா? ஆனால் இதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் பூமியை போன்று பல கோள்கள் இருப்பதாகவும், விரைவில் ஏலியன்கள் பூமியை நோக்கி வரும் என்றும் கூறி வருகின்றனர்.
 
அமெரிக்காவின் ஏரியா 51 என்ற பகுதி ஏலியன்கள் உலாவும் பகுதி என கூறப்பட்டு வந்தாலும் அதன் மர்மம் விலகாமலே உள்ளது. அண்மையில் நாசா செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்ந்ததற்கான படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
 
இந்நிலையில் பிளாக் நைட் என்ற விண்கலம் பூமியை 1300 ஆண்டுகளாக கண்காணித்து வருவதாக சில அறிவியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த விண்கலம் குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதையில் இயங்குவதில்லை என்பதால் இதை கண்காணிப்பது ஆராய்ச்சியாளர்ளுக்கு கடினமாக இருந்து வருகிறது.
 
மேலும் இந்த விண்கலம் தொடர்ந்து ரேடியோ அலைகளை அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த விண்கலத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்