40 அரசியல் கட்சிகளும் கலைப்பு; தேர்தலில் போட்டியிடுவது யார்? – மியான்மரில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (09:25 IST)
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் கடந்த 2020ம் ஆண்டில் ஆங் சான் சூகியின் தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டிய ராணுவம் 2021ம் ஆண்டில் ஆட்சியை கலைத்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதனால் மியான்மர் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்திற்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நிலவி வருகிறது. ஆங் சான் சூகி உள்ளிட்ட பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மக்களாட்சி அமைப்பதற்கான பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் அறிவித்தது. ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆங் சான் சூகியின் தேசிய லீக் கட்சி உள்ளிட்ட மியான்மரில் இருந்த 40 அரசியல் கட்சிகளை கலைப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக அந்த கட்சிகள் பதிவு செய்து கொள்ளவில்லை என ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் ராணுவத்தின் ஆதரவை பெற்ற தொழிற்சங்க வளர்ச்சி கட்சி ஆட்சியை எளிதில் கைப்பற்றவே இந்த கட்சி கலைப்பை ராணுவம் நடத்தியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்