இப்படியுமா போட்டி வச்சி பரிசு கொடுப்பாங்க!!!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (12:28 IST)
ரஷியாவில் பெரிஷ்னிகி என்ற நகரில் கொசுத் திருவிழா சமீபத்தில் நடந்தது. இதில் அதிக கொசுக்கடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.


 


கொசு என்றாலே உலகம் முழுவதும் ஒருவித அலர்ஜியும், பயமும் நிலவுகிறது. முன்பு கொசுவினால் மலேரியா நோய் பரவியது. தற்போது ‘ஜிகா’ எனும் கொடிய வைரஸ் நோய் பரவுகிறது.

ஆனால், கொசு கடியின் மூலம் ரஷிய சிறுமி ஒருவர் பரிசு வென்று இருக்கிறாள். ரஷிய கொசுத் திருவிழாவில் அதிக கொசுக்கடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து இரினா இலியுகினா என்ற 9 வயது சிறுமி போட்டியில் கலந்து கொண்டாள். அவள் 43 கொசுக்கடி பெற்றாள். இதன் மூலம் அதிக கொசுக்களால் கடி பட்டவள் என்று அறிவிக்கப்பட்டு ‘செராமிக் கோப்பை’ பரிசு பெற்றாள்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்