உலகக் கோப்பை போட்டியை காணவரும்படி ஆஸ்திரேலியா பிரதமருக்கு மோடி அழைப்பு

Webdunia
புதன், 24 மே 2023 (22:44 IST)
இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.  இன்று காலை அவர் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்து பேசினார்.

அதில், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதும் , இரு நாடுகளின் வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு ,பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றைப் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்)  அக்டோபர் 5 ஆம் தேதி முதல்   நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில்  நடைபெறவுள்ளது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வரும்படி, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானிசுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி பிரதமர் இன்று சிட்னி செய்தியாளர்களிடம் கூறியதாவது:   ‘’இந்தியா- ஆஸ்திரேலியா இரு நாடுகள் இடையேயான உறவு டி20 கிரிக்கெட் போல அடுத்தகட்டத்திற்குச் சென்றுள்ளது. வரும்  அக்டோபர்-  நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண  வரும்படி ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை அழைக்கிறேன்…இந்தியாவில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தையும் நீங்கள் காணலாம் ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்