’பெண்களின் ஆடையை அவிழ்க்க முயன்ற கும்பல் ‘ ! பரபரப்பு சம்பவம்

திங்கள், 10 ஜூன் 2019 (19:54 IST)
அசாம் மாநிலத்தில் சுமார் 500 இளைஞர்கள் சேர்ந்து ,ஊரின் திருவிழாவிற்கு ஆட வந்த பெண்களை ஆடை அவிழ்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து பெண்கள் புகார் அளிக்கவே போலீஸார் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள காரம்ப் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாரம்பரிய திருவிழா கொண்டாடுவது வழக்கம். அப்படி விழா நடக்கும்போது வெளி ஊர்களில் இருந்து பெண்களை கூட்டி வந்து விழாவை நடத்துவது அவ்வூரின் வழக்கம். இதற்கான ஏற்பாட்டை அந்த கிராமத்தில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்வார்கள்.
 
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷாருக்கான் , சுபான் கான் ஆகிய இருவரை போலீஸார் கைதுசெய்தனர். 
 
அதாவது ஊரில் விழாநடத்துவது தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் அங்கிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட  ஆண்கள் விழாவின் போது மேடையில் ஆடிகொண்டிருந்த நடனப்பெண்களிடன் தவறாக நடக்கமுயன்று அவர்களின்  ஆடையை அவிழ்க்க முயன்றனர்.
 
இதையடுத்து இந்த 500 பேரில் இந்த இருவர் மீது சாகான் போலீஸ் ஸ்டேசனில் மீது புகார் அளிக்கப்பட்டது. அதில் விழாவின் போது விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும்,  அவர்கள் நடனப்பெண்கள் மோட்டார் சைக்கிளில் போகும் கற்களைக்கொண்டு வீசியதாகவும், தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
 
மேலும் இந்த விழாவை நடத்தியவர்கள் மேற்குவங்காள மாநிலம் கூச்பெகாரிலிந்து இந்த நடனப்பெண்களை அழைத்துவந்துள்ளனர். மேலும் கிராமத்தில் இவர்களின் நடனத்தைக் காண மிக அதிக ரேட்டுக்கு டிக்கெட்டை விற்றுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இதுகுறித்து மேலும்  சிலரைப் பிடிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்