அப்போது கடையில் வேலை செய்யும் பெண், இருவருக்குன் நகைகளின் டிசைன்கள காண்பித்துள்ளார். இடையிடையே பணிபெண்ணிடம் பேச்சுக் கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு,சட்டென மேஜையில் இருந்த 5 சவரன் மதிப்புள்ள 4 தங்க டாலர்களை திருடிக்கொண்டனர்.
அப்போது பணிப்பெண் நகைகளை எல்லாம் எண்ணிப்பார்க்கிற போது, நகைகள் குறைந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே முதலாளிக்கு தகவல் தெரிவித்து, போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் , கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து , அதில் உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.