’எதிரி நாட்டுக்காக’ உளவு பார்த்ததாக அமைச்சர் கைது : அரசியலில் பரபரப்பு

வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:23 IST)
இஸ்ரேல் இன்றைய உலகில் சக்தி மிக்க நாடாக உள்ளது. அவ்வப்போது இவர்களுக்கும் பாலஸ்தினியர்களுக்கும், ஈரானியர்களுக்கும் போர் எழுவது வழக்கம். உலகில் அதிக செல்வந்தர்களையும், அறிவாளிகளைவயும் கொண்டுள்ள  நாடு இஸ்ரேல் தான்.
இஸ்ரேலில் கடந்த 1996 ஆம் ஆண்டில் எரிசக்தித்துறையின் மந்திரியாகப் பதவி வகித்தவர்  கோனன் செகேவ்.  இவர் இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடான ஈரானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் வைத்து  ஈரான் நாட்டு அதிகாரிகளுக்கு முக்கியமான ஆவணங்கள், ரகசிய தகவல்களை கொடுத்ததாக புகார் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இஸ்ரேல் நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் கோனன் மீது சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவ்வழக்கில்  கோனானுக்கு 11 ஆண்டுகள் சிறைதண்டனை அளித்து  நேற்று முந்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இச்சம்பவம் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்