இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமராக தொடர்வாதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டினால் மெஜாரிட்டியை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தை கூட்டினால் ரணில் மெஜாரிட்டியை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றம் திடீரென முடக்கப்பட்டது.
மேலும் நாட்டின் சட்டப்பூர்வமான பிரதமர் ரணில் விக்ரசிங்கே தான் என்று சபாநாயகர் ஜெயசூர்யா அங்கீகரித்துள்ளதும் ராஜபக்சேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ராஜபக்சேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவும் அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் சபாநாயகர் இல்லாமலேயே ராஜபக்சே பதவியேற்க தீர்மானம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கொழும்பு நகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.