இலங்கை தலைநகர் கொலும்பில் துப்பாக்கிச்சூடு! இருவர் காயம்..!

ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (17:39 IST)
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்துவருகின்ற நிலையில் சற்று நேரத்திற்கு முன் இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைச்சக அலுவகங்கள் அமைந்துள்ள இடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
அரசியல் நெருக்கடியின் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.
 
இலங்கையின் பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா ஆவார். அவர் சற்றுமுன் பெட்ரோலியத்துறை அலுவலகத்துக்குச் சென்றபோது அவருடைய பாதுகாவலர்களுக்கும் அந்த அலுவலகத்தில் பணியாற்றுகிற ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த போது, அது மோதலாக முற்றி,  பின் இந்த துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளது. 
 
அதாவது அர்ஜூனா ரணதுங்கா பெட்ரோலியத்துறை அமைச்சகத்திலிருந்து சில முக்கியமான ஆவணங்களை எடுத்துச்செல்ல தன் பாதுகாவலர்களை உடன் அழைத்துவந்த போது அலுவலகத்தில் வைத்து இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
 
மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்துள்ள இரண்டு ஊழியர்களும் பலத்த காயமடைந்துள்ளதால் அவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்