ஆண்டிகுவா நாட்டில் தஞ்சமான நீரவ் மோடி உறவினர்: இந்தியா அழைத்து வர ஏற்பாடு

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (08:10 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13578 கோடி முறைகேடாக கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பிரபல வைரவியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நீரவ் மோடி உறவினர் மெகுல் சோக்சி, ஆண்டிகுவா நாட்டில் இருப்பதாகவும், அவர் அந்நாட்டின் குடியுரிமையை பெற்று தஞ்சம் அடைந்திருப்பதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
 
கடந்த ஜனவரி மாதமே ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமையை அவர் பெற்றுள்ளதாகவும், அவரது குடியுரிமையை ரத்து செய்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்யும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் மெகுல் சோக்சி இந்தியா அழைத்து வரப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்