துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி மரணமடைந்தார். அந்த விவகாரம் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர் அப்போது மது போதையில் இருந்தார் என்ற செய்தியும் வெளியானது.
அந்நிலையில், அவரின் உடலுக்கு மகாராஷ்டிரா அரசு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை கொடுத்தது. அவர் பத்மஸ்ரீ பட்டம் பெற்றிருப்பதாலும், கலையுலகில் அவர் செய்த சேவைக்கும் அரசு மரியாதை கொடுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், இதுபற்றி மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி சிறந்த நடிகை. ஆனால், நாட்டிற்கு அவர் என்ன செய்து விட்டர் விட அரசு மரியாதை கொடுத்தார்கள் என தெரியவில்லை. நீரவ் மோடி மோசடியில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பவே அவரின் இறுதிச்சடங்குளை பெரிது படுத்தி காட்டும்படி ஊடகங்களுக்கு மத்திய அரசு தெரிவித்தது என அவர் பேட்டியளித்தார்.