கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், புளுடீக் பயனாளிகள் 8 டாலர் கட்டணம் கட்டவேண்டும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி 8 டாலர் கொடுத்தால் எந்த விதமான ஆவண சரிபார்ப்பு மின்றி புளுடீக் வசதி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மளமளவென இறங்கி ஒரே நாளில் 15 பில்லியன் நஷ்டமானது. இது இந்திய மதிப்பில் சுமார் 12,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து புளுடீக் திட்டத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.