போலி ட்விட்டர் கணக்குகளுக்கு புளூடிக்: ஜீசஸ் பெயரில் கூட ஒரு புளூடிக் கணக்கு!

வெள்ளி, 11 நவம்பர் 2022 (21:55 IST)
8 டாலர் கொடுத்தால் எந்த விதமான ஆவணங்களும் சமர்ப்பிக்காமல் புளூடிக் வழங்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பல போலி டுவிட்டர் கணக்குகள் புளூடிக் வசதியை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக ஜீசஸ் என்ற பெயரில் உள்ள கணக்கு புளூடிக் வாங்கி இருப்பதாகவும் அதில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் குவிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
 
மருந்து நிறுவனம் பெயரில் உள்ள ஒரு போலி கணக்கு எட்டு டாலர் கொடுத்து புளூடிக் வாங்கிய பிறகு இன்சுலின் மருந்துகள் இலவசம் என டுவிட் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதைவிட மோசமான ஒன்று டெஸ்லா நிறுவனத்தின் பெயரிலேயே ஒரு போலி டுவிட்டர் கணக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் அதற்கும் புளூடிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரபல நிறுவனங்கள், நபர்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு பணம் செலுத்தி புளூடிக் வாங்குவதால் எது உண்மையான கணக்கு என்பதை புரிந்து கொள்ள பயனாளிகள் குழப்பம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்