7 ஆண்டுக்கு பின் டாப்10ல் இருந்து வெளியேற்றம்: ஃபேஸ்புக் மார்க் சொத்து மதிப்பு குறைவு
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (06:30 IST)
பேஸ்புக் நிறுவனத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களின் சொத்து மதிப்பு கணிசமாக குறைந்தது. இதனால் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அவரது பெயர் டாப் 10 பட்டியலில் இருந்து வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலை சமீபத்தில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட நிலையில் அதில் முதல் 10 இடங்களில் உள்ள பணக்காரர்களை பட்டியலிட்டுள்ளது. இந்த ய பட்டியலில் கடந்த 7 ஆண்டுகளாக இருந்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இருந்த நிலையில் இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக உள்ளது
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்கள் வெளியேறியதற்கு அவரது நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்ததே காரணம் என போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் முதல் முறையாக முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறி 11வது இடத்தில் உள்ளார் என்பது விடப்பட்டது
அமெரிக்காவின் முதல் 5 பணக்காரர்களாக எலோன் மஸ்க் ($251 பில்லியன்), ஜெஃப் பெசோஸ் ($151 பில்லியன்), பில் கேட்ஸ் ($106 பில்லியன்), லாரி எலிசன் ($101 பில்லியன்), வாரன் பஃபெட் ($97 பில்லியன்) ஆகியோர் உள்ளனர்.