அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் உலக அளவில் கோடீஸ்வரர்களில் முதல் இடத்தில் எலான் மஸ்க் உள்ளார். டெஸ்லா கார் நிறுவன, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றின் நிறுவனராக இவரின் சொத்து மதிப்பு 219 பில்லியன் டாலர்கள். 171 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அதிக அளவு கோடீஸ்வரர்கள் உள்ள நாட்டில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 90.7 பில்லியன் டாலர்கள் சொத்துகளோடு முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், 90 பில்லியன் சொத்துக்களோடு கௌதம் அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 28.7 பில்லியன் டாலர் சொத்துமதிப்புள்ள ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாம் இடத்தில் உள்ளார்.