மலேசியாவில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்! 47 பேர் கவலைக்கிடம்! – விபத்துக்கு காரணம் யார்?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:59 IST)
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மெட்ரோ ரயில்கள் ஒரே தடத்தில் வந்து நேரெதிராக மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டை சுரங்கப்பாதையில் 213 பயணிகளுடன் வந்த மெட்ரோ ரயில் ஒன்று, அதே தடத்தில் எதிராக வந்த காலி பெட்டிகள் கொண்ட ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அளிக்கப்பட்ட தவறான தகவல் தொடர்பே இரு ரயில்களும் ஒரே பாதையில் பயணிக்க காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்