2-நாட்கள் அரசு முறைப் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
இன்று இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, அமைச்சர்கள் வரவேற்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.