லண்டன்: ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்!

Webdunia
புதன், 23 மே 2018 (12:28 IST)
தூத்துக்குடியில் போராட்டகார்கள் மீது துப்பாக்கி நடத்தியதை கண்டித்து, லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகமெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், லண்டனில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தூர்த்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூப்பாக்கி சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அங்குள்ள ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர்.
 
அந்த போராட்டத்தில் கொலைகார அனில் அகர்வால் இந்த வீட்டில்தான் இருக்கிறார் என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்