பிக்பாஸில் கிடைத்த பணத்தில் ராஜூ செய்த முதல் செலவு!
திங்கள், 17 ஜனவரி 2022 (19:30 IST)
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் செய்த முதல் செலவு என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது
பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் அதில் ராஜு டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டு 50 லட்ச ரூபாய்க்கு செக் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட பரிசு ரூபாயில் முதல் செலவாக ராஜூ தனது அம்மாவுக்காக ஒரு விலை உயர்ந்த புடவை வாங்கி கொடுத்ததாக அவருக்கு நெருக்கமானவர்களின் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியிட்டு உள்ளது
மேலும் ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடை செய்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. ராஜூவின் நண்பர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது