அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதைச் சாதகமாக பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள திறமைமிக்க ஊழியர்களை ஈர்ப்பதற்காக, சீனா K-விசா என்ற புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய விசா, அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படும் ஊழியர்களை இலக்காக கொண்டு இந்த விசா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த முயற்சி, திறமையான வெளிநாட்டு ஊழியர்களை தன்பக்கம் ஈர்த்து, தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் தனது வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.