H1B விசா கட்டண உயர்வு, அமெரிக்க மருத்துவ துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்தனர். பல மருத்துவமனைகளில் வெளிநாட்டு மருத்துவர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது. இதனால், கட்டண உயர்வினால் மருத்துவ பணியாளர்களை பணியமர்த்துவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவானது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 7 கோடி மக்கள் மருத்துவர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க, அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ், அதிபரின் உத்தரவில் சில விலக்குகள் இருக்கும் என்றும், அதில் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார்.