குல்பூஷண் மரண தண்டனைக்கு தடை. சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (00:00 IST)
இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ரா அமைப்பிற்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.



 


இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியாவின் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் குல்பூஷண் ஜாதவை விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை நியாயமானது என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் மறு உத்தரவு வரும் வரை அவருக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தியா தரப்பில் இருந்து குல்பூஷனை சந்திக்க பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்