இலங்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ.340-க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (17:48 IST)
இலங்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதை அடுத்து அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள்களின் விலை விண்ணை முட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென மீண்டும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 
 மண்ணெண்ணெய் மானிய விலையில் தொடர்ந்து வழங்கி வருவதால் இலங்கை பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு அதிக அளவு இழப்பு ஏற்பட்டதாகவும் இதனை தவிர்க்க லிட்டருக்கு 250 ரூபாய் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்ட தாகவும் கூறப்பட்டது 
 
இதனால் 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் திடீரென 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்