அதிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் காத்மண்டு முதலிடம்!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (22:09 IST)
மாசுபட்ட நகரங்களில் பட்டியலின் நேபாளம் நாட்டைச் சேர்ந்த  காத்மண்டு முதலிடம் பிடித்துள்ளது.

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு, மிகவும் வறுமையான நாடு, செழுமையான நாடு, போன்ற பட்டியல்களைப் போல் உலகின் மிகவும் மாசுப்பட்ட நகங்களின் பட்டியலை ஐக்யூ ஏர்- இன் வெளியிட்டுள்ளது.

அதில், உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பட்டியலில் நேபாள நாட்டில் தலைநகர் காத்மண்டு முதலிடம் பிடித்துள்ளது. காற்றின் தரக்குறியீடு 190 ஐ தாண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது

இதுகுறித்து நேபாள அரசாங்கம், காட்டுத்தீ, விவசாய எச்சங்களை அப்பகுதியில் எரிப்பதால்தான் அங்கு அதிகம் மாசுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியது.

இந்த  நிலையில், இந்தக் காற்று மாசுபாட்டினால், புற்று நோய், பக்கவாதம், ஆஸ்துமா, மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை மக்களுக்கு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்