ரூ.122 கோடிக்கு ஏலம் போன காஸ்ட்லி நம்பர் பிளேட்! அப்படி என்ன நம்பர் அது

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (20:18 IST)
துபாயில்  உலகப் பட்டினியைப் போக்க துபாய் அரசு முடிவெடுத்த  நிலையில், பேன்ஸியான நம்பர் பிளேட்டை  ரூ.122 கோடிக்கு ஏலத்தில் விற்று  நிதி திரட்டியுள்ளது..

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில், பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

தற்போது ரம்ஜான் காலம் என்பதால், துபாய் அரசு உலகப் பட்டினியைப் போக்கும் வகையில், 100 கோடி உணவுகள் தயாரித்து, வழங்கும் திட்டத்தை பிரதமர் முகமமது பின் ரஷீத் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்ட அந்த நாட்டு அரசு முடிவெடுத்தது. அதன்படி, அந்த நாட்டில் பேன்ஸியான நம்பர்களை ஏலம் விடுவது வழக்கம். இந்த நிலையில், இந்த  நம்பர் பிளேட்களை ஏலம் விடுவதற்கான பொறுப்பு எமிரேட்ஸ் ஆக்சன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில், 10 இரட்டை இலக்க எண்களான ஏஏ 19, ஏஏ22, ஏ ஏ80, எக்ஸ் 36, எச் 31, ஜே 57, என்41 ஆகிய  நம்பர் பிளேட்டுகளுடன் ஒய் 900, கியூ 22222, ஆகிய எண்கள் கொண்ட  நம்பர் பிளேட்டுகள் அறிவிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில், ஏஏ 19 நம்பர் என்ற பிளேட் நம்பர் 4.9 மில்லியன் திராம்ஸ்க்கு, இந்திய மதிப்பில் ரூ.10.92 கோடிக்கு ஏலம் போனது. இதையடுத்து, ஓ 71 என்ற நம்பர் பிளேட் 2.150 மில்லியன் திராம்ஸ்க்கு,  இந்திய மதிப்பில் ரூ.4.79 கோடிக்கு ஏலம் போனது.

இதையடுத்து, பி7 என்ற நம்பர் பிளேட் 55 மில்லியன் திராம்ஸ்க்கு இந்திய மதிப்பில் ரூ.122.6 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2008 ஆம் ஆண்டு 1 ஆம் நம்பர் பிளேட் தன் 52.2 மில்லியன் திராம்ஸுக்கு, இந்திய மதிப்பில் ரூ.116.3 கோடிக்கு ஏலம் போன நிலையில், இதை முறியடித்து,  உலகின் அதிக காஸ்டியான  நம்பர் பிளேட் என்ற சாதனையை பி7 நம்பர் பிளேட் படைத்துள்ளது. இதை ஏலத்தில் வாங்கியவர் பெயர் வெளியிடவில்லை.

இத்தொகை முழுவதும் அந்த நாட்டின் 100 கோடி உணவு நன்கொடை திட்டத்திற்காக வழங்கப்படும் என அந்த  நாட்டு அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்