ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு: நூலிழையில் உயிர் தப்பினார்..!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (10:25 IST)
ஜப்பான் பிரதமர் மீது பைப் குண்டு வீச்சு தாக்குதல் நடந்த நிலையில் அவர் நூலிழையில்  உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தெற்கு ஜப்பானில் உள்ள வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர்  புமியோ கிஷிடா  பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் கையெறிகுண்டை பிரதமரை நோக்கி வீசி உள்ளார் அந்த குண்டு வெடித்து புகைமூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த சம்பவத்தில் பிரதமர் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் பிரதமரின் பாதுகாவலர்கள் பிரதமரை பத்திரமாக அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
மேலும் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தற்போதைய பிரதமர் மியோ கிஷிடா  மீதும் குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்