ஃபுகுஷிமா விபத்தை விட அதிக பலி.. துருக்கி சிரியாவில் பெரும் சோகம்..!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (07:54 IST)
ஃபுகுஷிமா விபத்தை விட அதிக பலி.. துருக்கி சிரியாவில் பெரும் சோகம்..!
 
ஃபுகுஷிமாவில் நிகழ்ந்த அணு உலை வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட துருக்கி சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட உயிர் பலி அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா என்ற இடத்தில் அணு உலை வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 19,758 கூறப்பட்டது. இந்த நிலையில் துருக்கி சிரியா ஆகிய இரண்டு நாடுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் இழந்தவர் எண்ணிக்கை 21,000ஐ கடந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் தேசிய மீட்பு படையினர் உள்பட உலகின் பல நாடூகளின் மீட்பு படையினர் துருக்கி மற்றும் சிரியாவில் மீட்ப பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இடிபாடுகளுக்கு இடையே இருக்கும் பிணங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி வருவதால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 30000 வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்