உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

Prasanth Karthick

ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (10:03 IST)

பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என்று தொடர்ந்த ஆராய்ச்சியில் உயிரினங்கள் வாழும் கிரகம் ஒன்றை உண்மையாகவே கண்டுபிடித்துள்ளார் விஞ்ஞானி ஒருவர்.

 

நட்சத்திர மண்டலத்தில் ஏராளமான கோள்கள், கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் பூமியில் மட்டுமே தற்போது வரை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பூமி தவிர இதே போன்று வேறு சில கிரகங்களிலும் நிச்சயமாக உயிரினங்கள் வாழும் என்ற நம்பிக்கையோடு விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளை செய்து வருகின்றன. 

 

அவ்வாறாக இதுவரை உயிரினங்கள் வாழத் தகுதியான கிரகங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உயிரினங்கள் நிஜமாகவே வாழும் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை வைத்து ஆய்வு மேற்கொண்டதில், K2-18b என்ற கிரகத்தில் டைமெத்தில் சல்பைடு, டைமெத்தில் டை சல்பைடு உள்ளிட்ட வாயுக்களை கண்டறிந்துள்ளனர். இவை கடல்பாசிக்களால் வெளியிடப்படும் வாயுக்கள்.

 

அந்த கிரகத்தில் இந்த வாயுக்கள் வெளிப்படுவதன் மூலம் கடல்பாசி உள்ளிட்டவை இருப்பதும், மேலும் சில உயிரினங்கள் அங்கு வசிக்கலாம் என்பதும் 98% உறுதியாகியுள்ளது. மேலும் அந்த கிரகமானது பூமியை விட இரண்டு மடங்கு பெரியதாகவும், அதிகமான நீர் பரப்பை கொண்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்த இங்கிலாந்து ஆய்வுக்குழுவை வழிநடத்தியவர் இந்திய வம்சாவளியான விஞ்ஞானி நிக்கு மதுசூதன் ஆவார். வேறு உலகில் உயிர்கள் உள்ளதை இந்திய வம்சாவளி ஒருவர் கண்டறிந்துள்ளதை பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்