போப் பிரான்சிஸ் பதவி விலகுகிறாரா?

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (20:12 IST)
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது முதிர்வு காரணமாக பதவி விலகுவதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து அவர் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்கத் திருச்சபையில் தலைவர் போப் ஆண்டவராக பிரான்சிஸ்(85) பதவி வகித்து வருகிறார். இவர் மூட்டு வலியால்  பாதிக்கப்பட்டு நிலையில், சில நாட்களாக  சக்கர நாட்காலியைப் பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், விரைவில் போப் பிரான்சிஸ் பதவி விலகுவதைப் பற்றி அறிவிப்பார் என தகவல் வெளியானது.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: பதவியில் இருந்து விலகும் எண்ணம் என் மனதில் நுழையவில்லை. வரும் 4 ஆம் தேதி கனடாவில் பயணம்  மேற்கொள்ள இருக்கிறேன்.அப்போது உக்ரைன் செல்லும் திட்டம் உள்ளது  எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்