பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்! – ஆப்பு வைத்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (12:59 IST)
அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த பயணிகள் விமானத்தில் இந்திய மாணவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக விமானங்களில் சக பயணிகள் மீது சிலர் சிறுநீர் கழிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து புதுடெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் மீது சங்கர் மிஷ்ரா என்ற நபர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் தற்போது இப்படியான ஒரு சம்பவம் அமெரிக்கா – இந்தியா இடையே பயணித்த விமானம் ஒன்றில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இந்தியாவின் புதுடெல்லிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று பயணித்துள்ளது. விமானம் நடுவழியில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த ஆர்யா வோஹ்ரா என்ற இந்திய மாணவர் மதுபோதையில் சக பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். மேலும் இருக்கையில் அமராமல் அங்கிருந்த பயணிகள், சிப்பந்திகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ், அந்த பயணி விமானத்திற்கும், விமான பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும், எனினும் விமானம் பத்திரமாக டெல்லி வந்தடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸிடம் விரிவான அறிக்கையை கோரியுள்ள இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அந்த மாணவர் விமானத்தில் பறப்பதற்கான தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்