கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளும் சசிகலா ; ஜாலியாக சுற்றும் சுதாகரன் : சிறை அப்டேட்

செவ்வாய், 13 மார்ச் 2018 (12:30 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தற்போது அங்கு சென்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியே கசிந்துள்ளது.


 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சசிகலா, இளவரசி இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திவாகரன் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார்.
 
அந்நிலையில், சசிகலா உள்ளிட்டோருக்கு சிறையில் 5 அறைகள் உட்பட சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதகாவும், இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயனா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும், முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின் அந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில், சிறையில் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக கைதிகள் சிறையுனுள் ஏதேனும் வேலை செய்தாக வேண்டும். அதற்கு அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படும். அந்த வகையில், சசிகலா காளான் வளர்த்தல், கைவினை அழகு சாதனப் பொருட்களை தயாரித்தல் ஆகிய வேலைகளை செய்து வருகிறாராம். மேலும், அவர் கம்ப்யூட்டரும், கன்னட மொழியை சிறையில் கற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல், அவரது உறவினர் இளவரசியும் கன்னடம் கற்றுக் கொண்டு தற்போது சக கைதிகளிடம் கன்னடத்திலேயே பேசி வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இப்படி இருக்க, சுதாகரன் எந்த வேலையும் செய்யாமல் சக கைதிகளுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்