பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ‘சார்க்’ மாநாட்டில் இந்திய சார்பில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள கலந்து கூடாது என தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்தது.
அதை ஒரு சவாலாக கருதி சார்க் மாநாட்டில் ராஜ்நாத் சிங் கொண்டார். மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் பெயரினை நேரடியாக பயன்படுத்தாமல் மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் கூறுகையில் ”தீவிரவாதிகளை தியாகிகள் போல் புகழக் கூடாது, தீவிரவாதிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தனிநபர் மற்றும் நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
சார்க் மாநாட்டு நிகழ்வுகளை படம் பிடிக்க இந்திய ஊடகங்கள் உட்பட யாறுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், ராஜ்நாத் சிங்கின் உரையின் முக்கிய அம்சங்கள் மறைக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.