இந்திய விமானங்களுக்கு ஏற்கனவே பல நாடுகள் தடையை நீடித்து வரும் நிலையில் தற்போது கனடாவும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் சுமார் 40 ஆயிரம் பேர் என்ற அளவில் இருப்பதால் பல நாடுகள் இந்திய விமானதிற்கு தடை விதித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது கனடா நாடும் ஆகஸ்ட் 21 வரை இந்திய விமானங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் இந்திய விமானங்களுக்கு தடை விதித்த நிலையில் அவ்வப்போது தடையை நீட்டித்து வருகிறது என்பதும் தற்போது மீண்டும் ஒருமுறை நீட்டித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து கனடா அமைச்சர் தெரிவித்தபோது மருத்துவ நிபுணர்கள் பரிந்துரையின்படி இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் இன்னும் நிலைமை மோசமாக இருப்பதாகவும் டெல்டா வகை பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்