பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு..!

Mahendran

வியாழன், 8 மே 2025 (10:39 IST)
பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில், விடுமுறையில் உள்ள போலீசார் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியாவை திரும்பத் தாக்கும் நிலை உருவாகி வாய்ப்பு இருப்பதால், எல்லை மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில், போலீசாருக்கு வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் மாநில காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதேபோல், விமான மருத்துவ சேவை சங்கம் மற்றும் விமான போக்குவரத்து மேலாண்மை,  ஆய்வுகள் அகாடமியின் மருத்துவ அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அது மட்டுமின்றி, மருத்துவ அதிகாரிகள் எந்த இடத்தில் பணியில் அமர்த்டினாலும்  வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்