அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தியை அடுத்து, இந்திய பங்குச் சந்தை உயர்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா பங்குச் சந்தைகளும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு வெற்றி பெற்றார் என்ற தகவல் வந்த பிறகு, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் குமாரில் 900 புள்ளிகளும் உயர்ந்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல், ஜப்பான் பங்குச்சந்தை இன்று 263 புள்ளிகள் உயர்ந்து, 38,003 என்ற புள்ளிகளில் வணிகமாகிறது. மேலும், ஆஸ்திரேலியாவின் ASX சந்தை 67 புள்ளிகள் உயர்ந்தது என்றும், தென்கொரியா பங்குச் சந்தை உயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ட்ரம்ப் வெற்றி பெற்றதால் உலகளவில் ஸ்திரத்தன்மை உருவாகும், மேலும் எந்த இரண்டு நாடுகளுக்கிடையில் போர் ஏற்பட்டாலும் அதை தடுத்து நிறுத்தும் வல்லமை படைத்தவர் அவர் என்பதால், அவரது வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.