தண்ணீரை தடுத்து பாருங்க.. தக்க பாடம் கற்பிப்போம்! - இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் பிரதமர்!

Prasanth K

புதன், 13 ஆகஸ்ட் 2025 (15:25 IST)

சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியாவால் ரத்து செய்யப்பட்டது குறித்து இந்தியாவை அச்சுறுத்தும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னதாக பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்தி நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. விவசாயத்திற்கு பெருமளவில் சிந்து நதிநீரை நம்பியுள்ள பாகிஸ்தான் இதனால் கொந்தளித்து அடிக்கடி இந்தியாவை மிரட்டி வருகிறது.

 

முன்னதாக சிந்து நதிநீர் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், முன்னாள் மந்திரி பிலாவல் பூட்டோ உள்ளிட்டோர் இந்தியாவை மிரட்டும் வகையில் பேசி வந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவை கண்டித்து பேசியுள்ளார்.

 

சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய அவர் “எங்கள் தண்ணீரை தடுத்து நிறுத்தி விடுவோம் என அச்சுறுத்துகிறீர்கள். ஆனால் உங்களால் பாகிஸ்தானின் ஒரு சொட்டு தண்ணீரை கூட பறிக்க முடியாது என எதிரிகளுக்கு சொல்லிக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களை செய்ய இந்தியா தொடர்ந்து முயற்சி செய்தால் உங்கள் காதுகளை மூடிக் கொண்டு இருக்க வேண்டிய அளவிற்கு பாடம் கற்பிக்கப்படும்” என பேசியுள்ளார்.

 

சமீபமாக பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் இந்தியாவை சீண்டும் விதமாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்