மனைவியை பலாத்காரம் செய்த கணவனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (18:04 IST)
அமெரிக்காவில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியை பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்த குற்றத்திற்காகவும் 9 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றுள்ளார்.


 
 
அமெரிக்காவில் பெண் ஒருவர் தூக்கத்துக்கு அடிமையானவர். அவருக்கு மது அருந்தும் பழக்கமும் உண்டு. இதனால் அந்த பெண் மது அருந்துவிட்டு நன்றாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
 
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக அவரது கணவர் பயன்படுத்திக்கொண்டு அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தான் மனைவியை பலாத்காரமும் செய்வதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் அந்த பெண் போதையில் தூக்கத்தில் இருந்ததால் அவருக்கு கணவர் பலாத்காரம் செய்தது தெரியாது.
 
இந்நிலையில் ஒருநாள் கணவரின் செல்போனில் தனது கணவரால் தான் பலாத்காரம் செய்யபடும் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். கணவரின் செயலலால் தான் வேதனையடைந்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் கூறியுள்ளார்.
 
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் இது பலாத்காரம் மற்றும் பாலியல் தாக்குதல் என தீர்ப்பளித்து அந்த கணவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்