10,000 சூரியன்கள்; நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வெள்ளி, 12 ஜனவரி 2018 (15:58 IST)
பால்வெளி அண்டத்தில் சூரியனைப் போன்று 10,000 நட்சத்திரங்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

 
நாசா விஞ்ஞானிகள் 9 ஆண்டுகளுக்கு மேலாக நட்சத்திரங்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதில் சூரியனை போன்று 10,000 நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளனர். தங்கள் ஆய்வில் கிடைத்த தகவல்களை கொண்டு அவர்கள் முப்பரிமாண படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
 
அதில் சில நட்சத்திரங்கள் சூரியனை விட இரு மடங்கு மிக வேகமாக நகர்வதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நாசா விஞ்ஞானிகள் நாம் வாழும் சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்டு பல சூரிய குடும்பங்கள் இருக்கலாம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்