பேய்களை கண்டுபிடிப்பது எப்படி?

Webdunia
வியாழன், 12 மே 2016 (22:16 IST)
தொழில்நுட்ப உலகத்தில் பேய் இருப்பதை வீடியோ கேமரா மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
 


 
தொழில்நுட்பம் மூலம் அனைத்தும் சாத்தியம் என்ற நிலையை அடையும் நேரம் தொலைவில் இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் உலகெங்கும் பல சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் பலவற்றை சாதித்து இருக்கும் மனித இனம் தனக்கு தெரியாத பல கேள்விகளுக்கு இன்றும் பதில் தேடி கொண்டு தான் இருக்கின்றது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், தொழில்நுட்பம் இன்று வரை அனைவரது வாழ்க்கையையும் எளிமையாக்கி இருக்கின்றது. இந்த வளர்ச்சியை கொண்டு பேய் இருப்பதை கண்டுபிடிப்பது ரொம்ப சுலபமான காரியம்.

பொதுவாக பேய்களை நேரில் பார்த்தவர்களை விட அவைகளை வீடியோவில் பார்த்தவர்கள் தான் அதிகம. அதே முறையை கொண்டு வீட்டில் பேய் இருப்பதை வீடியோ கேமரா மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு வேலை உங்கள் வீட்டில் பேய் இருப்பது போன்ற அசாதாரண சூழல் நிலவும் பட்சத்தில் இரவு நேரத்தில் வீட்டில் வீடியோ கேமரா ஒன்றை வைத்து குறிப்பிட்ட அறையில் குறைவான அளவு வெளிச்சம் படர செய்து கேமராவை ஆன் செய்து அறையை விட்டு வெளியேறி விட வேண்டும்.

மறு நாள் அதிகாலை கேமராவினை நிறுத்திவிட்டு வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒரு வேலை வீட்டில் பேய் இருந்தால் அது கேமராவில் பதிவாகியிருக்கும்.

வீட்டில் வீடியோ கேமரா இல்லாமல் ஸ்மார்ட்போன் செயலிகளை கொண்டும் பேய்களை கண்டறிய முடியும்.

Ghost Radar®: CLASSIC, Camera Ghost Radar, Ghost Radar Ultimate Prank, மற்றும் Ghost Camera Radar Joke போன்ற செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து பேய்களை கண்டறிய முடியும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்