ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

Siva

ஞாயிறு, 10 நவம்பர் 2024 (15:46 IST)
முத்திரைத்தாள் பேப்பரை வைத்து 500 ரூபாய் கள்ள நோட்டு அடித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சடித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சோன்பத்ரா என்ற பகுதியில், மினரல் வாட்டர் விளம்பரங்களை அச்சடித்து வந்த ஒரு கும்பல் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அச்சிடுவது எப்படி என்பதை கற்றுக் கொண்டனர்.

இதனை அடுத்து அவர்கள் மிர்சாப்பூர் என்ற பகுதிக்கு சென்று முத்திரைத்தாள் மொத்தமாக வாங்கி வந்து அந்த தாளில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.

இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் ஒரே வரிசை எண்ணில் பல ரூபாய்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், கள்ள நோட்டு அடித்த கும்பல் போலீசாரிடம் சிக்கிக்கொண்டது.

அவர்களிடம் இருந்து நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்த உபகரணங்கள், லேப்டாப், பிரிண்டர், முத்திரைத்தாள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், யூடியூப் பார்த்து கள்ள நோட்டு அடிப்பது எப்படி என்றது கற்றுக் கொண்டதாக வாக்குமூலம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்