ட்ரம்புக்கு எதிராக களத்தில் இறங்கிய ஹாலிவுட்

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (21:06 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஹாலிவுட் பட உலகினர் திடீர் போராட்டத்தில் ஈட்டுப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

 
உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு முந்தைய நாள் லாஸ் ஏஞ்சல்ஸில் விருந்து நடைபெறுவது வழக்கம்.
 
ஆனால் நேற்று அந்த விருந்துக்கு பதிலாக ஹாலிவுட் பட உலகினர் டிரம்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில்  500க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 
 
சர்வதேச அகதிகள் குழுவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான டேவிட் மிலிபேண்ட், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட அகதிகளையும் அமெரிக்காவினுள் நுழைய விடாமல் தடை செய்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசினார்.
 
இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த கட்டுரையில்