இஸ்ரேல் – ஹிஜ்புல்லா அமைப்பினர் இடையே சமீப காலமாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி ஹிஜ்புல்லா அமைப்பு தாக்கியுள்ளது.
இஸ்ரேல் – காசா ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு முதலாகவே தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் காசாவிற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் அங்கு நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பலியானார்கள். இன்னும் காசா யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில் லெபனான் எல்லை வழியாக ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலை தாக்கியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹிஜ்புல்லாவை ஈரான் தான் பின்னாலிருந்து இயக்குவதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதிகள் சிலர் பலியானார்கள். பதிலுக்கு ஈரானும் பறக்கும் ட்ரோன்களை கொண்டு தாக்கியது. அதை தொடர்ந்து தற்போது ஹிஜ்புல்லா அமைப்பு இஸ்ரேல் எல்லை பகுதியில் ராக்கெட்டுகளை ஏவி தாக்கியுள்ளது.
இதனால் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து லெபனான் எல்லையில் உள்ள ஐடா ஆஷ் ஷாப் கிராமத்தில் பதுங்கியிருந்த ஹிஜ்புல்லா அமைப்பினர் மீது வான்வழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஹமாஸ், ஹிஜ்புல்லா எனா இரு அமைப்பையும் இரு பக்கமும் இஸ்ரேல் தாக்கி போர் தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.